நெல்லை கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணு உலை கழிவு மையத்தினை கண்டித்து பாளையங்கோட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கூடங்குளம் சுற்றுவட்டார மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி இதுவரை கொடுக்கப்படவில்லை, டெல்லியில் காற்றில் மாசு பெருகியுள்ளதையே அரசு தடுக்க முடியாத நிலையில் அணு உலையில் பிரச்னை என்றால் எப்படி பாதுகாக்கும்.
உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை! பின் எப்படி அணுவின் தீங்கை அரசு தடுக்கும்?
நெல்லை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவதற்காக நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டம் என்பது வெறும் ஒப்புக்காக மட்டுமே என்றும் டெல்லியில் காற்றில் மாசு பெருகியுள்ளதையே அரசு தடுக்க முடியாத நிலையில் அணு உலையில் பிரச்னை என்றால் எப்படி பாதுகாக்கும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவதற்காக ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் கருத்துக்கேட்பு கூட்டம் என்பது வெறும் ஒப்புக்காக மட்டுமே, இடிந்தகரை மக்களிடம் கேட்கட்டும், போராடிய உதயகுமாரிடம் கேட்கட்டும், ஏன் இப்போது வரை எதிர்ப்பை பேசகூட அனுமதிக்காமல் கழுத்து நெரிக்கப்படுகிறது. நாங்கள் அணுக்கழிவு மையம் அமைவதை எதிர்க்கிறோம் . திமுகதான் மீத்தேன் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட நாசக்கார திட்டங்களை கொண்டுவந்தது.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை முதலில் கேரளாவில்தான் வரவேண்டியது அங்கே தடுத்துவிட்டார்கள், அதுபோல் 2013ஆம் ஆண்டு அணுமின் நிலைய நிர்வாகம் அணுக்கழிவு மையத்தைக் கர்நாடகத்தில் கோலாரில் வைப்போம் என்ற அறிக்கை விட்டதற்கு அந்த நேரத்தில் கர்நாடகத்தில் முதலமைச்சரின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோரும் சேர்ந்து போராடித் தடுத்துவிட்டார்கள். ஆனால் இங்கே போராடவே அனுமதி கிடைக்கவில்லை’ என்று அவர் பேசினார்.