தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒற்றை தலைமை விவகாரம்: அதிமுகவை இயக்குபவர்கள் முடிவு செய்வார்கள் - முத்தரசன் - ஒற்றை தலைமை விவகாரம்

அதிமுக சுயமாக செயல்படவில்லை. ஒற்றை தலைமையா? அல்லது இரட்டை தலைமையா? என்பதை அதிமுகவை இயக்குபவர்கள் முடிவு செய்வார்கள் என நெல்லையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

முத்தரசன் பேட்டி
முத்தரசன் பேட்டி

By

Published : Jun 22, 2022, 9:37 PM IST

திருநெல்வேலி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு வரும் 6 முதல் 9 வரை திருப்பூரில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் டி.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநட்டில் தேசிய மாநில சமூக பிரச்சனை குறித்து விவாதம் செய்யப்பட்டு பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

முத்தரசன் பேட்டி

இறுதி நாளான ஆகஸ்ட் 9 இல் வெள்ளையனே வெளியேறு முழக்கம் எழுந்த நாள் அன்றைய தினத்தில் மக்கள் விரோத, பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கங்களை முன்வைத்து மாநாடு நடக்கிறது. மத்திய அரசு 8 ஆண்டுகாலத்தில் சொன்ன வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

மாறாக மக்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையே கொண்டு வந்துள்ளனர். அக்னிபாதை என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததில் இருந்து நாடே தீப்பற்றி எரிந்துவருகிறது. 17 வயதில் பணியில் சேரலாம் என்ற அக்னிபாத் திட்டம் இளைஞர்களை ஏமாற்றும் திட்டம்.

இந்த திட்டத்தை கைவிட வேண்டும், இது நல்ல திட்டமில்லை. இளைஞர்களை எந்த அரசியல் கட்சிகளும் தூண்டவில்லை. தானாக அவர்கள் போராடுகிறார்கள். இளைஞர்களின் வேலை நெருக்கடியை மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயன்படுத்தி கொள்கிறது.

4 ஆண்டுகள் பணி முடித்து வெளிவந்த இளைஞர்களின் நிலை கேள்விகுறியாகும் சூழல் நிலவிவருகிறது. ராணுவத்தில் ஆள் சேர்க்க பின்பற்றபட்டுவந்த பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

அக்னிபாத் திட்ட பிரச்சனை குறித்து ராணுவ தளபதிகள் தலையிட்டு கருத்துகள் சொல்வது தவறாகும். எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசு தலைவர் தேர்தலில் செயல்பட்டால் பாஜக அரசின் வேட்பாளரை தோற்கடிக்க முடியும்.

இது 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய பயனளிக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சுயமாக செயல்படவில்லை. ஒற்றை தலைமையா? அல்லது இரட்டை தலைமையா? என்பதை அதிமுகவை இயக்குபவர்கள் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்: முழுப்பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details