தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாட்டை பாண்டியநாடு, பல்லவநாடு என பிரிக்க வேண்டும்' - நயினார் நாகேந்திரன் - பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் திமுக அரசை கண்டித்து போராட்டம்

தமிழ்நாட்டை பாண்டியநாடு பல்லவநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும், அப்போது தான் நிர்வாக ரீதியாக தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை பெற முடியும் என்று நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

By

Published : Jul 5, 2022, 3:58 PM IST

Updated : Jul 5, 2022, 5:23 PM IST

நெல்லை:தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று (ஜூலை 5) மாநிலம் முழுவதும் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே மாவட்ட பாஜக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெல்லை சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும் பாஜக சட்டப்பேரவை தலைவருமான நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'தனித் தமிழ்நாடு வேண்டும் என்று ஆ.ராசா கூறுகிறார். ஏன் நான் சொல்கிறேன்; தமிழ்நாட்டை பாண்டியாடு, பல்லவநாடு என இரண்டாகப் பிரிக்கவேண்டும்' என்று பரபரப்பாக பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து. என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கவேண்டும். ஆந்திரா, தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளன.

நெல்லையில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி

எனவே, தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால், அதிக திட்டங்களைப் பெற முடியும். தமிழ்நாட்டில், போதை பழக்கம் அதிகரித்துள்ளன. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில், பாஜக தலையீடு எதுவும் இல்லை; அதிமுக விவரத்தில் பாஜக எப்பொழுதுமே நடுநிலையாக தான் செயல்படும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான்.. - நயினார் நாகேந்திரன்

Last Updated : Jul 5, 2022, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details