தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மாணவர்கள் பலியான விவகாரம்; தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளின் தரம் ஆய்வு செய்ய உத்தரவு'

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். மேலும், சுவர் இடிந்த பள்ளிக்கு இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை பத்து நாட்கள் பள்ளியை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

By

Published : Dec 17, 2021, 10:38 PM IST

திருநெல்வேலி: நெல்லை டவுனில் இருக்கும் சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி இடைவேளையில் மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன், சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர்சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய 4 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவர்களுக்குத் தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்த மாணவர்களுக்கு ரூ.3 லட்சமும் நிவாரணத்தொகை அறிவித்தார். இந்த உதவித் தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து,

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

இதனிடையே இறந்த மாணவர்களின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

மருத்துவமனையில் நிவாரணம்

மருத்துவமனையில் நிவாரணம்

அதன் பின்னர் சபாநாயகர், அமைச்சர், ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் மூன்று மாணவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின், உறவினர்களிடம் ரூ.10 லட்சம் அரசின் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலத்தை விசாரித்ததுடன் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறி, நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினர்.

மருத்துவமனையில் நிவாரணம்

விபத்து குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நெல்லை பள்ளி விபத்து நடந்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு தனக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இங்கு வந்துள்ளேன்.

பள்ளி விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றும் கட்டட ஒப்பந்தகார் ஜான்கென்னடி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மேலும், விசாரணை நடந்து வருகிறது. இதில் வேறுயாரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த 4 பேருக்குத் தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், கட்டடத் தரம் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

இதற்கிடையில் பள்ளிக்கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து சாஃப்டர் பள்ளிக்கு இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை பத்து நாட்கள் பள்ளியை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் பா...' ஆசிரியையாக மாறி பாடம் நடத்திய காஞ்சிபுரம் ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details