தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லை அருகே ஒருவர் வெட்டிக் கொலை: எஸ்பி நேரில் ஆய்வு - Cut and slaughter on the road

திருநெல்வேலி : நெல்லை அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்து வருகிறார்.

நெல்லை அருகே ஒருவர் வெட்டிக் கொலை: எஸ்பி நேரில் ஆய்வு
நெல்லை அருகே ஒருவர் வெட்டிக் கொலை: எஸ்பி நேரில் ஆய்வு

By

Published : Mar 1, 2021, 10:59 AM IST

திருநெல்வேலி அருகே உள்ள கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் மகன் ராஜா(50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், நடுவக்குறிச்சி பானு நகர் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ராஜாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராஜாவின் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொலையாளிகள் யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:இளம் பட்டதாரி பெண் கொலை வழக்கில் கொலையாளி கைது!

ABOUT THE AUTHOR

...view details