தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து: தாக்கியவருக்கு மாவுகட்டு - உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து

திருநெல்வேலியில் பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவர் தவறுதலாக கீழே விழுந்ததால் வலதுகையில் மாவுகட்டு போட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கியவருக்கு மாவுகட்டு
தாக்கியவருக்கு மாவுகட்டு

By

Published : Apr 24, 2022, 11:43 AM IST

திருநெல்வேலி:சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்.22) இரவு கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

இதற்கிடையில் உதவி ஆய்வாளரை தாக்கிய ஆறுமுகத்தை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவர் தவறுதலாக கீழே விழுந்ததால் வலதுகையில் மாவுகட்டு போட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக குற்றவாளிகளை காவல் துறையினர் உரிய முறையில் கவனித்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும் பிடிக்க முயன்றபோது கீழே விழுந்ததாகவும் காரணம் கூறுவதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நெல்லை அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

ABOUT THE AUTHOR

...view details