தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு மின் உற்பத்தி! - kudankulam nuclear power plant in thirunelveli

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் அலகில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

kudankulam-nuclear-power-plant
kudankulam-nuclear-power-plant

By

Published : Aug 24, 2020, 12:08 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டுவருகின்றன. இரண்டும் மொத்தம் 2,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன்கொண்டவை.

இரண்டு உலைகளிலும் அவ்வப்போது பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகளுக்காக உற்பத்தி நிறுத்தப்படும். அதன்படி மே மாதம் 31ஆம் தேதி அணுமின் நிலையத்தின் முதல் உலையில் பராமரிப்பு பணிக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதனால் இரண்டாவது உலையில் மட்டும் 940 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவந்தது.

இந்தநிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக அதில் 410 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து படிப்படியாக உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கூடங்குளம் அணு உலை - ரஷ்யாவிலிருந்து குழு வருகை

ABOUT THE AUTHOR

...view details