தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாளையங்கோட்டையில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி விழா - Krishna Jayanti festival at Palayamkottai

பாளையங்கோட்டையில் வழுக்கு மரம் ஏறுதல், கிரைனில் தொங்கிய பானையை மனித பிரமிடு அமைத்து உறியடித்தல் என கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 4, 2022, 4:39 PM IST

Updated : Sep 4, 2022, 5:30 PM IST

நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள ராமசாமி கோயிலில் இன்று (செப்.4) உற்சாகமாக நடந்த 27ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக நேற்று ரத்ததானம் வழங்குதல் மரம் நடுதல், ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து சிறுவர்கள் கண்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டு கோலாட்டம் அடித்தபடி பாளையங்கோட்டை ரத வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அப்போது ரத வீதிகளில் ஆங்காங்கே உறியடி நிகழ்ச்சிகளும் நடந்தன.

மேலும், ராமசாமி கோயில் திடலில் கிரைனில் தொங்கவிடப்பட்ட பானையை மனித பிரமிடு மூலம் இளைஞர்கள் போட்டி போட்டு உறியடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் மனித பிரமிடு அமைத்து உற்சாகமுடன் வழுக்கு மரம் ஏறினர். இதனை, ஏராளமாக பொதுமக்கள் உறசாகத்துடன் கண்டுகளித்தனர்.

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழா

இதையும் படிங்க: வெடிகுண்டுடன் விளையாடிய 4 குழந்தைகள் உயிரிழப்பு

Last Updated : Sep 4, 2022, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details