திருநெல்வேலி :கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
தீபாவளி முடிந்து டிஜிபி யை சந்தித்து புகார் அளிக்கவுள்ளேன். பாதுகாப்பு வேண்டும் என்ற காரணத்திற்காக நெல்லையில் டிஐஜியிடம் புகார் கொடுத்துள்ளேன்.
விஜயபாஸ்கர் மீது கேரள பெண் புகார் பல இடங்களில் நாங்களும் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும் ஒன்றாக கூடியுள்ளோம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதுவரை என்னிடம் 14 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
அவர் என்னுடன் மொபைலில் தகவல் பரிமாற்றம் செய்த ஆவணங்களும் உள்ளது. இவை அனைத்தும் டிஜிபியிடம் கொடுக்கவுள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க:பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு என தனி கொள்கைகள் விரைவில் அமல்படுத்தப்படும் - கீதா ஜீவன்