பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாவீது ராஜா நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர் நேற்று நள்ளிரவு புத்தாண்டையொட்டி குடும்பத்துடன் தேவாலயத்திற்கு சென்றிருக்கிறார். அதிகாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு மனோகரன் அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ, அலமாரி ஆகியவை உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 பவுன் நகை திருட்டு போயுள்ளது.
நள்ளிரவில் வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை! - நகைகள் கொள்ளை
நெல்லை: நள்ளிரவில் வீடு புகுந்து 40 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
theft
இது குறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நள்ளிரவில் கொள்ளை குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கையூட்டுப் பெற்ற போதைப்பொருள் தடுப்புக் காவலர்கள் இருவர் கைது!