தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மரணம்! - Hari singh suicide

இருட்டுக் கடை நெல்லை ஹரி சிங் Nellai Iruttukadai Hari singh suicide suicide
இருட்டுக் கடை நெல்லை ஹரி சிங் Nellai Iruttukadai Hari singh suicide suicide

By

Published : Jun 25, 2020, 1:07 PM IST

Updated : Jun 25, 2020, 4:48 PM IST

13:04 June 25

பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரி சிங் மரணமடைந்த செய்தி திருநெல்வெலி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது இருட்டுக் கடை அல்வா தான். இந்தக் கடை நெல்லையப்பர் கோயில் முன்பாக அமைந்துள்ளது. இக்கடையின் உரிமையாளர் ஹரி சிங். ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட இவர், இரண்டாவது தலைமுறையாக இக்கடையை நடத்திவந்தார். இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இச்சூழலில் அவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியது. இதையடுத்து அவர் பெருமாள்புரத்தில் உள்ள தனியார் நர்ஸிங் ஹோமில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இண்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். 

அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருமாள்புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: காலம் காயங்களை மறக்க செய்யும் என்பது பொய்- சுஷாந்த் பட நாயகி உருக்கம்

Last Updated : Jun 25, 2020, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details