தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெற்பயிர்கள் வாடும் அபாயம்: அணை திறக்க விவசாயிகள் கோரிக்கை! - அணை திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருநெல்வேலி: நீர் பற்றாக்குறை காரணமாக நெற்பயிர்கள் வாடும்நிலை ஏற்பட்டுள்ளதால், அணையை திறக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லையில் பயிர்கள் வாடும் அபாயம்: அணை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

By

Published : Apr 25, 2019, 11:11 PM IST

திருநெல்வேலி மாவட்டம் விஜயனாராயணம் பகுதிக்கு அருகே குப்பைக்குறிச்சி என்னும் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்துவருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 2,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் வருடத்திற்கு இரண்டு முறை நெற்பயிர் செய்து வருகின்றனர்.

நெல்லையில் பயிர்கள் வாடும் அபாயம்: அணை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

இதில் கோடை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே சற்று மழை பெய்து வருவதினால் தற்போது குளம் ஓரளவுக்கு நிரம்பியுள்ளது. இதனால் இந்த குளங்களில் உள்ள தண்ணீரை சேமிப்பதற்கு அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், சில இடங்களில் நீர் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதால், மணிமுத்தாறு அணையை திறக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details