தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுபாஷ் சந்திர கபூர் வழக்கில் விரைவில் தீர்ப்பு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி - Nellaiappar Temple

சுபாஷ் சந்திர கபூர் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக திருநெல்வேலியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 19, 2022, 12:41 PM IST

திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தை (சிலைகள் பாதுகாப்பு மையம்) இன்று (அக்.19) ஆய்வு செய்தப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் சுபாஷ் சந்திர கபூர் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது என்று தெரிவித்தார்.

கடத்தல் சிலைகள்-இணையவழி ஆய்வு: அப்போது அவர், 'தமிழ்நாட்டில் இந்த வருடம் 40 வழக்குகள் சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 குற்றவாளிகளிடமிருந்து, 199 சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை மீட்டுள்ளோம். இது உள்நாட்டோடு நின்று விடாமல் தமிழ்நாட்டில் உள்ள சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதை இணையதளம் மூலமாகவும் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

வெளிநாட்டிலுள்ள சிலைகள்:வெளிநாடுகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு கோயில்களில் இருந்த சிலைகள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்காவில் 37 சிலைகளும், சிங்கப்பூரில் 17 சிலைகளும், மற்ற வெளிநாடுகளில் மற்ற சிலைகளும் உள்ளது தெரியவந்துள்ளது.

விரைவில் சுபாஷ் சந்திர கபூர் வழக்கில் தீர்ப்பு:இதுதவிர குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுபாஷ் சந்திர கபூர் வழக்கு, தற்போது இறுதி கட்ட நிலையை எட்டியுள்ளது. விரைவில் இதற்கான தீர்ப்பு வரும் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

சிலைகள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்:இந்த சிலைகளை நெல்லையப்பர் கோயிலில் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக, நாங்கள் பல அறிவுரைகளையும் வழங்கி உள்ளோம். கிருஷ்ணாபுரத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு, மற்ற சிலைகளையும் கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் பாதுகாப்பு தொடர்பாக சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு ஒரு மாதமாவது அதனை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டு வருகிறோம்.

சிலைகளை மீட்க நடவடிக்கை:தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள சிலைகள் அதிகமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. அவைகளை மீட்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போது உள்ள பாதுகாப்பு மையங்கள் தொடர்பில் எப்படி, அதனை மேலும் சரி செய்யலாம் என்பது குறித்து நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம். ஒரு திருவிழாவுக்கு ஒரு சிலையை கொண்டு சென்று, அதே சிலைதான் திரும்பி வருகிறதா? என்பது தொடர்பாக நமக்கு தெரியாது. அது தொடர்பாகவும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

நெல்லையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பேட்டி

இதையும் படிங்க: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் 7 பஞ்சலோக சிலைகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details