தூத்துக்குடி மாவட்டம், பிஎன்டி காலனியைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் முருகன்(34). தூத்துக்குடி கடற்கரை சாலையில் மருந்தகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை இவர் நெல்லை சந்திப்பில் உள்ள இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் மேல் ஏறிய அவர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேம்பாலத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி! - நெல்லை போலிஸ்
நெல்லை: திருநெல்வேலியில் உள்ள இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் ஏறி நின்று, கீழே குதித்து விடுவதாக சத்தமிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின் பொதுமக்களில் சிலர் அவரை கீழே இறங்கும்படி கேட்டு பேச்சுவார்த்தயில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்து, சம்பவம் இடம் விரைந்த காவல் துறையினர், அவரிடம் நாசுக்காக பேசி சமாதானம் செய்து, அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். இதனால் மேம்பலாத்தில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், மனைவியிடம் ஏற்பட்ட குடும்ப தகராறில், மனவிரக்தி அடைந்ததால் தற்கொலைக்கு முயன்றதது தெரியவந்தது.