திருநெல்வேலி:நேற்று முன்தினம் (நவ.25) பெய்த கனமழையால் தாழ்வாக இருக்கும் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதிகளில் பெய்த அதிக கனமழை காரணமாக மாநகரையொட்டி உள்ள பிரதான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.
பழைய பேட்டை அருகே உள்ள கிருஷ்ண பேரி மற்றும் கண்டியபேரி குளங்கள் நிரம்பி மறுகால் பயந்து வருவதால், கிருஷ்ணபேரி ஊருக்குள் செல்லும் தாம்போதி பாலம் குளத்து நீரில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் கிருஷ்ணபேரி ஊருக்குள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
குளங்களில் இருந்து உபரிநீர் தாமிரபரணி கால்வாய் மூலம் சென்று கொண்டிருப்பதால் கால்வாய் நிரம்பி திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. டவுன் ஜவஹர் திரு முகமது அலி தெரு மாதா பூங்குடி தெரு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்வாய் நீர் புகுந்தது.
இதன் காரணமாக பொது மக்கள் வெளியேற முடியாத நிலை உருவானது. அப்பகுதிக்கு அந்த மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை தற்காலிகமாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய ஈடுபடுத்தப்பட்டனர் ,இருப்பினும் கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் டவுனில் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகளை சூழ்ந்தபடி உள்ளது.
மழை நீர் வடியாததால் மக்கள் பெரும் அவதி இதனால் இரண்டாவது நாளாக அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கால்வாய் ஓட்டியுள்ள வீடுகளில் தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
டவுண் பகுதியை தவிர மேலும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாத்தால் மக்கள் சிரம்ம் அடைந்துள்ளனர் மாநகராட்சி ஊழியர்களும் இரண்டாவது நாளாக அடைப்பை சரிசெய்து வருகின்றனர். தற்போது நெல்லையில் மழை பெய்யாத நிலையில் அடுத்த மழை பெய்யும் முன்பு நிலைமையை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்