தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

மாஞ்சோலை மலைப் பகுதியில் ஒரே நாளில் 360 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மாஞ்சோலை மலை
மாஞ்சோலை மலை

By

Published : Oct 17, 2021, 8:21 PM IST

திருநெல்வேலி: மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாஞ்சோலை மலைப்பகுதியில் நேற்று (அக்.16) முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அங்கு ஒரே நாளில் 360 மில்லி மீட்டர் ( 36 செ.மீ) மழை பெய்தது. தொடர் மழையால் கோதையாறு அணை மற்றும் மணிமுத்தாறு அருவியில், நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாஞ்சோலையில் தொடர் மழை

மேலும் தொடர் மழையால் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (அக்.17) வேலைக்குச் செல்லவில்லை.

அதேபோல் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாஞ்சோலை நாலுமுக்கில் இருந்து கோதையாறு அணைக்குச் செல்லும் வழியில் உள்ள சிறிய பாலத்தில் நேற்று சுற்றுலா சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக, காரில் இருந்த சென்னையைச் சேர்ந்த ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து மாஞ்சோலை மலைப்பகுதியில் விட்டு விட்டு லேசான மழை பெய்கிறது. இதேபோல் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம் போன்ற பகுதிகளிலும் இரண்டு நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது.

அதிகபட்சம் மாஞ்சோலையில் 360 மி.மீ., பாபநாசத்தில் 275 மி.மீ., சேர்வலாற்றில் 144 மி.மீ., மணிமுத்தாறில் 102 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:மகன் துரை வையாபுரிக்கு பதவி? - வைகோ சொன்ன பதில்

ABOUT THE AUTHOR

...view details