நெல்லை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, டவுன், பெருமாள்புரம், கேடிசி நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சுமார் 15 நிமிடம் பலத்த மழை பெய்தது.
தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை மார்க்கெட் ஆகிய இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.