நாங்குநேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் நான்காயிரத்து 242 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார்.
இது குறித்து ஹரிநாடார், பெருந்தலைவர் காமராஜர் வழியில் நேர்மையாக தேர்தலை சந்தித்தோம். திமுக, அதிமுக கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றுள்ளன. எனக்கு வாக்களித்த சமுதாய, தொகுதி மக்களுக்கு நன்றிகள் எனத் தெரிவித்தார்.