திருநெல்வேலி:அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 150க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கரோனோ வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பயிற்சி மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது.
மருத்துவர்கள் திடீர் தர்ணா போராட்டம்
கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.