தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிக்கு பிப்.2ஆம் தேதி முதல் செல்ல அனுமதி! - திருநெல்வேலி சுற்றுலாத் தலங்கள்

அகஸ்தியர், மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் இவ்விடங்களுக்குச் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

tourists are allowed to go agasthiyar falls
திருநெல்வேலி

By

Published : Jan 30, 2022, 10:46 PM IST

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு கடந்த 26ஆம் தேதியில் இருந்து வருகிற 6ஆம் தேதி வரையிலும்,

புலிகள் கணக்கெடுப்பு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற ஒன்றாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இரண்டாம் தேதி முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விவசாயியை அவமானப்படுத்திய ஊழியர்கள் - மன்னிப்புக்கேட்ட மஹிந்திரா

ABOUT THE AUTHOR

...view details