தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் முதல்முறையாக காணொலி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: கரோனா ஊரடங்கு எதிரொலியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் வருவதை தடுக்கும் பொருட்டு காணொலி காட்சி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் முதன் முறையதாக காணொலிக்காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்
தமிழ்நாட்டில் முதன் முறையதாக காணொலிக்காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்

By

Published : Aug 4, 2020, 4:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் வாரம்தோறும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாரம்தோறும் திங்கள்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரடியாக வந்து ஆட்சியரை சந்தித்து அடிப்படை பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பொதுப் பிரச்னைகள் குறித்து மனு அளித்து செல்வர்.

கரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனு பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. இருந்தும் அதிக அளவில் கூட்டம் வருவதால் அந்த முறையும் மாற்றப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் கூட்டமாக வருதை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக காணொலி காட்சி மூலம் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 3) தேசிய தகவலியல் மையத்தின் தொழிநுட்ப உதவியுடன் காணொலி கட்சி மூலம் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆட்சியரிடம் குறைகளைத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details