திருநெல்வேலி:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான வங்கி உதவித்தொகை, அரசு பதிவிதழில் பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு திட்டம், மானியத்துடன் கூடிய தொழில் கடன் உள்ளிட்டவைகள் 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், "திருநங்கைகளுக்கு நீண்ட கால திட்டம் செயல்படுத்தப் படுவதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் என திட்டமிட்டு உலக திருநங்கையர் தினத்தில் அவர்களுக்கான பரிசாக 4 வகையான முயற்சிகள் எடுக்கபட்டுள்ளன.
இப்போது மக்கள் குறைதீர் கூட்டம் மீனவர்கள் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் போல நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே மாதம் முதல் நடைபெறவுள்ளது.