தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீடியோ: ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் சஸ்பென்ட் - thirunelveli

திருநெல்வேலியில் பட்டா கேட்டு வந்த பெண்களிடம் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

20,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் சஸ்பென்ட் :வைரல் வீடியோ
20,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் சஸ்பென்ட் :வைரல் வீடியோ

By

Published : Jun 18, 2022, 6:03 PM IST

திருநெல்வேலி: பணகுடியில் வருவாய் ஆய்வாளராக ஜான்சிராணி என்பவர் பணியாற்றி வந்தார். இவரிடம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட துரைகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு பெண்கள் பட்டா கேட்டு அனுகியுள்ளனர். இதற்கு ஜான்சிராணி, தலா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் வாங்கிய வைரல் வீடியோ

இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் முதல் தவணையாக தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆயிரம் ரூபாயை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை ஜான்சிராணி ஏற்றுக்கொண்டு பணத்தை வாங்கினார்.

அப்போது நான்கு பெண்களில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் ஆட்சியர் விஷ்ணு, வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நெல்லையில் 45 சவரன் நகை திருட்டு - அதிமுகவை சேர்ந்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details