திருநெல்வேலி, மேற்கு மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணைப் பகுதியில் ஏழு வயது நிரம்பிய பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது. கடையநல்லூர் பகுதியில் இன்று பகல் ரோந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஏழு வயது பெண் யானை பரிதாப சாவு! - இயற்கை ஆர்வலர்கள்
திருநெல்வேலி : கருப்பாநதி வனப்பகுதியில், ஏழு வயது நிரம்பிய பெண் யானை உடல்நலக்குறைவால் காட்டுக்குள் உயிரிழந்து கிடந்ததைக் கண்ட வனத் துறையினர் யானையை மீட்டுள்ளனர்.
காடுக்குள் உயிரிழந்த ஏழு வயது பெண் யானை
பின்பு, கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டடு, அவர்கள் வந்த பிறகு உடற்கூறு ஆய்வு செய்து அங்கேயே புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், இறந்த யானைக்கு சற்று அருகே சுமார் எட்டு யானைகள் கொண்ட யானை கூட்டம் இரு பிரிவாக சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : யானைகளுக்கிடையே மோதல்... உயிரிழந்த ஆண் யானை!