தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்துக்கள் குறித்து விமர்சனம்... பாலத்தில் இருந்து தொங்க விடப்பட்ட ஆ.ராசாவின் உருவ பொம்மை... - DMK Member of Parliament

இந்துக்கள் குறித்து விமர்சனம் செய்த திமுக எம்பி ஆ.ராசாவின் உருவ பொம்மை பாலத்தில் தொங்க விடப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 17, 2022, 11:04 AM IST

Updated : Sep 17, 2022, 3:13 PM IST

திருநெல்வேலி: திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருததுக்களை தெரிவித்தார். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை கேடிசி நகர் மேம்பாலத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மை தொங்க விடப்பட்டது. இரவில் மர்ம நபர்கள் ஆ.ராசாவின் உருவ பொம்மையை தயாரித்து பாலத்தில் தொங்குவது போல் கட்டிவிட்டு சென்றுள்ளனர்.

நெல்லை

இது குறித்து தகவல் அறிந்து நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் அங்கு சென்று தொங்க விடப்பட்டிருந்த ஆ.ராசாவின் பொம்மையை அப்புறப்படுத்தினர்.

மேலும், சம்பவ இடத்தில் இந்து பெண்களை விபச்சாரி எனக் கூறிய திமுக எம்பி ஆ.ராசாவை தூக்கிலிடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மேல் அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு லஞ்சம் பெற்ற எஸ்ஐ மீது வழக்குப்பதிவு...

Last Updated : Sep 17, 2022, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details