திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், "கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செயல்படாமல் இருந்த சிறுபான்மை நல ஆணையத்தை தூசிதட்டி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட கிறிஸ்தவர்கள் தங்கள் ஆராதனை வழிபாடு நடத்த முடியாத சூழல் உள்ளது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு
ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறுபான்மையின மக்கள் மிக பாதுகாக்க மிக கண்ணியத்தோடு வாழ கூடிய நிலை உள்ளது. ஜனநாயகத்தில் சிறுபான்மை என்பது ஒரு ஊனம். ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களுக்கு வழங்கும் உதவித்தொகை குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலையே நின்று விடுகிறது," என்று கூறினார்.
குறிப்பாக புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கு அனுமதி கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசும்போது, பலர் அரசு புறம்போக்கு இடத்தில் தேவாலயங்களை கட்டிவிட்டு அனுமதி கேட்பதாகவும், அது போன்ற இடங்களுக்கு யார் நினைத்தாலும் அனுமதி கொடுக்க முடியாது என்றும் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படையாக தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர், சுமார் 18 லட்சம் மதிப்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
அதனையடுத்து ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முல்லை பெரியாறு அணையில் குறிப்பிட்ட அளவு நீரை பெருக்கவில்லை என்று பெரிய போராட்டம் நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.