திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் என மொத்தம் காலியாக உள்ள 388 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்று இன்று (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நெல்லை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
குறிப்பாக நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் இதுவரை 21 வார்டுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 18 இடங்களில் திமுக வெற்றிபெற்று முன்னிலை வகித்துவருகிறது.
எதிர்க்கட்சியான அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதேபோல் அம்பாசமுத்திரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ள நிலையில் 14 இடங்களில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்று அம்பாசமுத்திரம் நகராட்சி அதிமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
அதேபோல் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ள நிலையில், எட்டு இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அங்கு அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
களக்காடு நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில், அங்கு 11 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் 10 இடங்களில் திமுக வேட்பாளர்கள் ஆறு இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். எனவே திமுக இங்கு சுயேச்சைகள் ஆதரவுடன் நகராட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது.
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் திமுக 10 இடங்களிலும், மணிமுத்தாறு பேரூராட்சியில் திமுக 11 இடங்களிலும், முக்கூடல் பேரூராட்சியில் திமுக எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் நெல்லையில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 17 பேரூராட்சிகளையும் ஆளுங்கட்சியான திமுகவே கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.
நெல்லை மாநகராட்சி ( மொத்தம் 55 வார்டுகள்)
திமுக கூட்டணி - 23
அதிமுக - 2
சுயேச்சை - 1
அம்பாசமுத்திரம் நகராட்சி ( மொத்தம் 21 )