தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக முன்னாள் மேயர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைப்பு! - former DMK mayor murder case two arrest

திருநெல்வேலி: திமுக முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிசிஐடி காவல் துறையினர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

திமுக பிரமுகர்கள் கைது

By

Published : Oct 31, 2019, 9:16 AM IST

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.

திமுக முன்னாள் மேயர் கொலை வழக்கு - இருவர் கைது

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையிடம் ஒப்படைத்தது.

உமாமகேஸ்வரியை கொலை செய்ய பழங்களுடன் சென்ற கார்த்திகேயன்

கடந்த மூன்று மாதங்களாக பல கட்ட விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் கார்த்திகேயன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை (30-10-19) கார்த்திகேயனின் தாயார் சீனியம்மாள், தந்தை தன்னாசி ஆகியோரை கைது செய்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில், இருவரையும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்போடு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

நெல்லை பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக நிதி உதவி

ABOUT THE AUTHOR

...view details