தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனாவால் தாயை இழந்து தவிக்கும் சிறுவர்களுக்கு உதவிக்கரம்' - நெல்லை ஆட்சியர் உறுதி - திருநெல்வேலியில் ரோனாவால் தாயை இழந்து தவிக்கும் சிறுவர்கள்

நெல்லை: கரோனா தொற்றால் தாயை இழந்து தவிக்கும் சிறுவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

By

Published : May 25, 2021, 7:35 PM IST

திருநெல்வேலி மாவட்டம், துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஞான மரிய செல்வி என்பவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மரிய செல்வியின் கணவர் ஜெபம் மாணிக்கராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

இந்த தம்பதிக்கு ஸ்டீபன் ராஜ், தர்மராஜ், செல்வின் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ஏற்கெனவே தந்தையை இழந்த சிறுவர்கள் தற்போது தாயையும் இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். தற்போது மூன்று சிறுவர்களும் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

கரோனா தொற்றால் தாயை இழந்து தவிக்கும் சிறுவர்கள்

இதற்கிடையில் கரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் சிறுவர்களுக்குப் பராமரிப்பு மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் தொடங்கினார்.

இந்நிலையில் ஞான மரிய செல்வியின் மகன்களுக்கு அரசு எல்லா உதவிகளும் செய்யத் தயாராக இருப்பதாகவும், அவர்கள் உதவி நாடி வந்தால் நிச்சயம் கைகொடுப்போம் என்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவுக்கு ட்ரம்ப் சாப்பிட்ட மருந்து, இந்தியாவிலும் விற்பனை: ஒரு டோஸ் விலை தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details