தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா நவீன கட்டுப்பாட்டு அறை திறப்பு!

திருநெல்வேலியில் இணையதளம் வசதியுடன் கூடிய நவீன கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

modern control room
modern control room

By

Published : May 1, 2021, 7:10 AM IST

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை போன்று திருநெல்வேலி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இம்மாவட்டம் முழுவதும் தினமும் சராசரியாக 600க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக நேற்று (ஏப்ரல் 30) ஒரே நாளில் மட்டும் இம்மாவட்டத்தில் 643 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் திருநெல்வேலியில் பத்திரிகையாளர்கள் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள், காவலர்கள் மற்றும் முகவர்களுக்கு எடுக்கப்பட்ட சிறப்பு பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் கரோனோவை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக திருநெல்வேலியில் இணையதள வசதி மற்றும் தொலைதொடர்பு வசதியுடன் கூடிய சிறப்பு நவீன கட்டுப்பாட்டு அறையை நேற்று (ஏப்ரல் 30) மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இங்கே பகுதி வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், உணவுகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் தினமும் தகவல் தெரிவிப்பார்கள்.

அதேபோல் சிகிச்சை வழிமுறைகள் சிகிச்சை மையங்கள் குறித்து நோயாளிகள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். சிறப்பம்சமாக கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்கள் நோயாளிகளை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்களா முறையான உணவு உட்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க உள்ளனர்.

எனவே திருநெல்வேலியில் கரோனோவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த கட்டுப்பாட்டு அறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ABOUT THE AUTHOR

...view details