திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கொண்டா நகரம் பகுதியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிணறு வெட்டும் தொழிலாளர்கள் கூடில் அமைத்து வசித்து வருகின்றனர். ஊரடங்கு முன்பே பிழைப்பு தேடி வந்த இவர்கள், தற்போது தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 22 முதல் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வரும் இவர்கள், தங்களது குழந்தைகளை காணாமல் தவித்து வருவதாகவும், இதுவரை சேமித்து வைத்திருந்த தொகையை இந்த ஊரடங்கு நேரத்தில் செலவழித்து விட்டோம். இதற்கு மேல் உணவுக்கு வழியில்லை என்றும் தெரிவித்தனர்.
சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் இதுகுறித்து செய்தியாளர்கள் வழியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு உதவி ஆட்சியர் சிவகுருநாதன் உத்தரவின்பேரில், அக்குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருக்கும் விஜயபாஸ்கருக்கும் பனிப்போரா?