திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த வாரம் பெற்றோரின் மீது கோபம்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரைப் பெற்றோர் தேடிவந்த நிலையில் தியாகராஜ நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாரதி என்பவர் காப்பாற்றி தன் வீட்டில் வைத்திருந்து பின்னர் காவல்துறையின் மூலம் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டிய காவல் துணை ஆணையர்! - ஆட்டோ ஓட்டுனரை பாராட்டிய காவல் துணை ஆணையர்
திருநெல்வேலி: பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை வீட்டுச் சென்ற சிறுமியை மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் துணை ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
Police praising auto driver
இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், சமயோஜிதமாகச் செயல்பட்டு அச்சிறுமியை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக ஆட்டோ ஓட்டுநர் பாரதியை நேரில் அழைத்துப் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் 'திருநெல்வேலியின் நேர்மை' என தனது சமூக வலைதளhd பக்கங்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமி வன்கொடுமை வழக்கில் சிக்கிய செய்தியாளர்!