திருநெல்வேலி: காவல்துறையில் குற்றங்களை தடுக்க பல்வேறு நவீன யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உடலோடு கூடிய கேமரா வழங்கும் புதிய திட்டம் (கேமரா பொருத்தப்பட்ட அதிநவீன ஜாக்கெட்) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்,திருநெல்வேலிமாநகர காவல்துறையில் பணிபுரியும் 33 காவலர்களுக்கு உடலோடு கூடிய கேமரா வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் சீனிவாசன், காவலர்களுக்கு உடலோடு கூடிய கேமராவை அவர்களின் சட்டையில் பொருத்திவிட்டார்.