தென்காசி: தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க முடியாததாலும், நேற்று (அக்.4) விடுமுறை தினம் என்பதாலும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் தடையை மீறி மேற்குதொடர்ச்சி மலையையொட்டி உள்ள அணையின் மறுகால் பகுதியில் குளிக்க படையெடுக்கத் தொடங்கினர்.
குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு, தடுப்புகள் அமைத்த காவலர்கள் இதனால் சமூக தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகிய அணைகளின் எல்லைப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அணைகளுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளையும் திருப்பி அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிலர் அதிகார பலத்தை பயன்படுத்தி உயர் அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் தடையை மீறி உள்ளே நுழைந்த வண்ணம் உள்ளனர்.