தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கு 2ஆவது முறையாக கரோனா தொற்று - covid guidelines

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரனுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ரூபி மனோகரனுக்கு கரோனா
ரூபி மனோகரன்

By

Published : Jan 21, 2022, 6:27 AM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி மனோகரனுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு லேசான காய்ச்சல், ஜலதோஷம் இருந்தது.

கரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

தான் பூரண நலமுடன் இருப்பதாகவும், கடந்த ஒருவார காலத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அறிக்கை மூலம் ரூபி மனோகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா முதல் அலையின்போது முதன்முறையாக ரூபி மனோகரனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது இரண்டு தவணை தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்பும், இரண்டாவது முறையாக கரோனா தொற்று அவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா - இன்று எத்தனை பேர் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details