தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.165.25 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்! - கரோனா குறித்து முதலமைச்சர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.165.25 கோடி மதிப்புள்ள நலத் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

chief minister edappadi palanisamy
chief minister edappadi palanisamy

By

Published : Aug 7, 2020, 2:33 PM IST

தென்மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதன்படி இன்று (ஆகஸ்ட் 7) திருநெல்வேலி மாவட்டத்திற்குச் சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதையடுத்து மாவட்டத்தில் ரூ.12.45 கோடி மதிப்பில் 11 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ரூ.165.25 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இறுதியாக 2,761 பயனாளிகளுக்கு ரூ.19.04 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி விட்டு, அங்கு 3,221 பயனாளிகளுக்கு ரூ.78.77 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அவ்வாறு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட அரசு அலுவலக கட்டடங்கள், சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிபோது...

அதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கரோனோ பாதிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:இ-பாஸ் நடைமுறையை எளிமைபடுத்த நடவடிக்கை - எடப்பாடி பழனிச்சாமி தகவல்

ABOUT THE AUTHOR

...view details