தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை நீடித்து வந்தது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டது. மழை வெள்ள சேதத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக வந்து பார்வையிட்டார். கடந்த வாரம் குமரி மாவட்டம் வந்த அவர் மழையால் துண்டிக்கப்பட்ட சாலைகள், தண்ணீரில் மூழ்கிய விளை நிலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மத்திய குழு ஆய்வு
அதேபோல் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குமரி மாவட்ட கண்காணிப்பாளர் ஜோதி நிர்மலா சாமி உள்ளிட்டோரும் மழை வெள்ள சேதத்தை பார்வையிட்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வெள்ள சேதத்தை பார்வையிட ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இன்று (நவ.22) தமிழ்நாடு வந்தனர்.
இந்தக் குழுவினர் இன்று 11 மாவட்டங்களில் ஆய்வு தொடங்கினர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆர்.பி.கவுல், மத்திய நீர் வள ஆராய்ச்சி இயக்க தங்கமணி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, மத்திய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் கொண்ட குழு பல இடங்களை ஆய்வு செய்ய வந்தனர்.