தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குலுக்கல் முறையில் அதிமுகவை வீழ்த்திய பாஜக - Urban Local Body Election vote Counting

நெல்லை அடுத்த பணகுடியில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

TN Urban Local Body Election
TN Urban Local Body Election

By

Published : Feb 22, 2022, 1:54 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் வள்ளியூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது.

இந்நிலையில், பணகுடி பேரூராட்சி 4ஆவது வார்டு அதிமுக, பாஜக வேட்பாளர்கள் சம எண்ணிக்கையில் வாக்குகள் (266) பெற்றனர். இதனால், வெற்றியை தீர்மானிப்பதில் தேர்தல் அலுவலர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, இருவரது பெயரையும் எழுதி குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்தனர். குலுக்கலில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 22 வயது வேட்பாளர் வெற்றி - சென்னை மேயர் பதவி கிடைக்குமா...?

ABOUT THE AUTHOR

...view details