தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனித் தேரோட்ட திருவிழா - திருநெல்வேலி ஸ்பெஷல்

நெல்லையப்பர் கோவிலில் கோலாகலமாகக் கொண்டப்பட்ட ஆனி தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நெல்லையப்பர்
நெல்லையப்பர்

By

Published : Jul 11, 2022, 6:18 PM IST

திருநெல்வேலி:தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனித் தேரோட்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று (ஜூலை 11) நடைபெற்றது. விநாயகர் சுவாமி, நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி சிலைகளின் தேர்கள் 4 ரத வீதிகளில் வலம் வந்தன.

இத்திருவிழாவில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்துு தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு உற்சாகமாக நடந்த ஆனித் தேரோட்ட திருவிழா

திருவிழாவில் பிற மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களும் ஏரளாமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால், மாநகரின் 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தேரோட்டத்தில் திரண்டிருந்த பக்தர்களின் கூட்டத்தின் ஒரு பகுதி

தேரோட்டத்தையொட்டி, நெல்லை மாநகர காவல்துறை அவினாஷ் குமார் உத்தரவின்பேரில், துணை ஆணையர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் தலைமையில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனித் தேரோட்டத்தையொட்டி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 300ஆண்டு பழமையான ரணகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

ABOUT THE AUTHOR

...view details