தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற மணி (40). இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். மேலும் பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.
கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகியான இவர், பாளையங்கோட்டையில் தொழில் செய்வதால் சுப்பிரமணி குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு (மே27) அவர் கடையிலிருந்து வீட்டுக்கு வரும்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டுக்குள் நடந்து சென்ற அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் சுப்பிரமணி என்ற மணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.