திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த ராமர் என்பவரின் மகள்கள் சங்கீதா(19), வைஷ்ணவி (19) இருவரும் பழைய பேட்டையில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கல்லூரி சென்றுவருவது வழக்கம். அந்த வகையில் இன்று (செப்.29) வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு இருவரும் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது முக்கூடல் அருகே உள்ள ஆலங்குளம் சாலையில், எதிரே வந்த லாரி வலதுபுறமாக திரும்பிய போது இந்த இருசக்கர வாகனம் லாரியில் மோதியது.
இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற சகோதரிகள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
திருநெல்வேலியில் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற சகோதரிகள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லாரியின் டயர் ஏறியதில் சங்கீதாவின் தலை நசுங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே, உயிரிழந்தார். அதோடு வைஷ்ணவிக்கு காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த முக்கூடல் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் நவநீத கிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து - படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதி