தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம் - Auto overturn accident at Ambai near Nellai

நெல்லை அருகே அம்பையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

4 பேர் காயம்
4 பேர் காயம்

By

Published : Aug 4, 2022, 1:35 PM IST

Updated : Aug 4, 2022, 1:43 PM IST

நெல்லையை சேர்ந்த கல்யாணி (வயது 70), இசக்கியம்மாள்(55), மற்றொரு இசக்கியம்மாள் (23), சந்தோஷ் (17) உள்பட 7 பேர் சிவந்திபுரத்தில் இருந்து, அம்பை வழியாக ஆட்டோவில் இன்று (ஆக.4) சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை நெல்லையை சேர்ந்த சத்திய நாராயணன்(32) என்பவர் ஓட்டினார்.

அம்பை வனத்துறை துணை இயக்குனர் அலுவலகம் அருகே ஆட்டோ சென்றபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் பயணித்த கல்யாணி, இசக்கியம்மாள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்து சென்ற அம்பை தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பழனியில் நிரம்பிய பாலாறு-பொருந்தலாறு அணை; முதல் வெள்ள அபாய எச்சரிக்கை

Last Updated : Aug 4, 2022, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details