தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று (மார்ச் 19) நிறைவு பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மார்ச் 17 வரையில் மொத்தம் 99 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று மட்டும் 90 பேர் வேட்புமனுக்களை அளித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சை வேட்பாளர்கள். மாவட்டத்தில் தொகுதி வாரியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்:
அம்பாசமுத்திரம்: இசக்கிசுப்பையா (அதிமுக), ஆவுடையப்பன் (திமுக), சி. ராணி ரஞ்சிதம் (அமமுக), சி. கணேசன் (மநீம), செண்பகவள்ளி (நாதக), எம். சுரேந்திரன் (புதிய தமிழகம்)
நாங்குநேரி தொகுதி: கணேசராஜா (அதிமுக), ரூபி மனோகரன் (காங்கிரஸ்), பரமசிவஐயப்பன் (அமமுக), சார்லஸ் ராஜா (மநீம), வீரபாண்டி (நாதக), அசோக்குமார் (புதிய தமிழகம்), சுப்புலட்சுமி (பகுஜன் சமாஜ்).