தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலியல் வன்புணர்வு செய்த நெல்லை இளைஞர் போக்சோவில் கைது! - nellai rape case

நெல்லை: 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

போக்சோவில் நெல்லை இளைஞர் கைது!

By

Published : Jun 2, 2019, 6:55 PM IST

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, சாந்தி நகரை சேர்ந்த 15 வயதுடைய 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் (20) என்ற இளைஞன் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமி குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போக்சோவில் நெல்லை இளைஞர் கைது!

காவல்துறையினர் பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்ட முகமது அசாருதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலப்பாளையம் காவல்நிலையத்தில் அவரிடம் விசாரனை நடத்தியப்பின், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details