சேலம்:மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் அருகில் உள்ள கூத்தனார் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அங்கமுத்து (21) அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, 2018 ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மேட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அங்கமுத்துவை கைதுசெய்தனர். இவ்வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.