தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வழிபறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

சேலம்: தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

By

Published : May 17, 2019, 11:26 AM IST

சேலம் அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மண்டை விஜய் (எ) விஜயகுமார். இவர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி கொண்டப்பநாயக்கனபட்டி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த பூபாலன் என்பவரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரைப் பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி, தங்கம் மோதிரத்தை பறித்து சென்றார்.

இதுதொடர்பான புகாரில் கன்னங்குறிச்சி போலீஸார் விஜய்யை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதன் பின்னர் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விஜயகுமார் தனது கூட்டாளிகள் பரசுராமன், வசந்த் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2018 டிசம்பர் 26ஆம் தேதி, கன்னங்குறிச்சி காவல் நிலைய எல்லையில் பகல் நேரத்தில் வீடு ஒன்றில் புகுந்து, அங்கிருந்த வயதான பெண்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி ஏழரை பவுன் தங்க சங்கிலி, மூன்று பவுன் தங்க வளையல்களை பறித்து சென்றார்.

இதேபோல் 2018 டிசம்பர் 29ஆம் தேதி, சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் சின்னகொல்லப்பட்டி சட்டக் கல்லூரி பேருந்து நிலையம் அருகில் இருந்த பழனியப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்ஃபோன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளார்.

இந்த வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்ற விஜயகுமார், ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வழிபறியில் ஈடுபட்டார்.

மேலும், இவர் கடந்த ஆண்டு மே மாதம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மகளிர் அழகு நிலையத்துக்கு சென்று, அத்துமீறி நடந்து கொண்டதுடன், 15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்ஃபோன் பறித்து சென்றதாக கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் வைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் பொதுமக்களின், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்த வழிபறியில் ஈடுபட்டு வந்த விஜயகுமாரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் கே.சங்கர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் சேலம் மத்திய சிறையில் இருக்கும் விஜயகுமாருக்கு குண்டர் தடுப்புக் காவல் சட்டம் தொடர்பான ஆணை வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details