தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யஸ்வந்த்பூர் - சேலம் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை - சேலம் யெஸ்வந்த்பூர் ரயில் சேவை

ஒரு வருடத்திற்கு பிறகு தர்மபுரி, ஓசூர் வழியாக யஸ்வந்த்பூர் - சேலம் இடையே முன்பதிவு செய்யப்படாத ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

yeshvantpur salem train started
yeshvantpur salem train started

By

Published : Aug 28, 2021, 12:21 PM IST

சேலம்: கரோனா பரவல் காரணமாக சென்ற ஆண்டு முதல் பயணிகள் முன்பதிவு செய்தே ரயிலில் பயணிக்கும் சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில் பயணிகள் திருப்தி அடையும் வகையில் முன்பதிவு இல்லாத ரயில் சேவை குறித்த செய்தியை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, வண்டி எண் 07315யஸ்வந்த்பூர் - சேலம் இடையே 30.08.2021 முதல் ஒவ்வொரு நாளும் தினசரி முன்பதிவு தேவையில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மதியம் 03:55 மணிக்கு யஸ்வந்த்பூரில் இருந்து புறப்படும். இந்த வண்டி, அதே நாள் இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும்.

வண்டி எண் 07316 சேலம் - யஸ்வந்த்பூர் 31.08.2021 முதல் தினசரி முன்பதிவு செய்யாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேலத்தில் இருந்து அதிகாலை 05:20 மணிக்கு புறப்படும். அதே நாள் காலை 11.15 மணிக்கு யஸ்வந்த்பூரை சென்றடையும்.

ரயில் நிறுத்தங்கள்

லோட்டேகொல்லஹள்ளி, ஹெப்பல், பானசவாடி, பெலந்தூர் சாலை, கார்மேலரம், ஹீலலிகே, அனேகல் சாலை, ஓசூர், கெலமங்கலம், பெரிய நாக துனை, ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, சிவாடி, முட்டாம்பட்டி, தோப்பூர், கருவள்ளி, செம்மந்தூர்.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் சேவை செயல்பாட்டில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details