தமிழ்நாடு

tamil nadu

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஏற்காடு படகு இல்லம் திறப்பு

ஏற்காட்டில் மூன்று மாதங்களுக்குப் பிறகு, படகு இல்லம் மீண்டும் திறக்கப்பட்டது.

By

Published : Aug 23, 2021, 5:23 PM IST

Published : Aug 23, 2021, 5:23 PM IST

மூன்று மாதங்களுக்கு பிறகு ஏற்காடு படகு இல்லம் திறப்பு
மூன்று மாதங்களுக்கு பிறகு ஏற்காடு படகு இல்லம் திறப்பு

சேலம்: ஏற்காட்டில் மூன்று மாதங்களுக்குப் பிறகு, படகு இல்லம் மீண்டும் திறக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், அண்மைக் காலமாக நோய்த்தொற்று குறைந்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

அதன்படி உயிரியல் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதி அளித்தது, தமிழ்நாடு அரசு.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஏற்காடு படகு இல்லம் திறப்பு

அதன்படி சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள படகு இல்லம் இன்று (ஆக. 23) திறக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலைமுதல் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி பொங்க குடும்பத்துடன் படகு சவாரி செய்துவருகின்றனர்.

மேலும், ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஸ் கார்டன் உள்ளிட்டப் பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் பூங்காக்கள் திறக்கப்படாமல் உள்ளன.

இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்காடு அடிவாரம் பகுதியிலுள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்காததால் மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: '7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'

ABOUT THE AUTHOR

...view details