சேலம்: ஜாகிர் அம்மாபாளையத்தில் பிரசித்தி பெற்ற காவடி பழனியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை(மே 18) காலை கோயிலுக்கு வந்தார்.
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து எடப்பாடி பழனிசாமி வழிபாடு
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து எடப்பாடி பழனிசாமி வழிபாடு
பழனி ஆண்டவர் வள்ளி தெய்வானையை வழிபட்டு, கோயில் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தார். பின்னர் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். மாநகர மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:"என் அம்மாவின் தியாகம்" - உருகிய பேரறிவாளன்