சேலத்தில் சுற்றுலாத் துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
'உலக சுற்றுலா தினம்'- சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் - சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள்
சேலம்: உலக சுற்றுலா தினத்தையொட்டி சித்தர்மலை அடிவாரத்தில் சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உலக சுற்றுலா தினம்
அதன்படி, இன்று சேலத்தில் சித்தர்கோவில் மலையடிவாரத்தில் கலை நிகழ்வுகளும், மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் சுற்றுலா போக்குவரத்து செயலர் கல்பனாவும், சுற்றுலா துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் சித்தர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனையடுத்து மிசோரம் மாநில நடனக் கலைஞர்கள், வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடன நிகழ்வை நடத்தினர்.